சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் வில்லியாக குஷ்பு?

ரஜினி படத்தில் வில்லியாக குஷ்பு நடிக்கிறாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி


ரஜினிகாந்த் தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168-வது படம். இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். சித்தார்த், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தின் கதை என்ற பெயரில் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் சில விவரங்கள் கசிந்தன. கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சத்தில் தயாராவதாக கூறப்பட்டது. ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரராக நடிப்பதாகவும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது குஷ்பு வில்லி வேடத்தில் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் மனைவியாக வரும் குஷ்பு, அவருடன் சண்டை போட்டு தனியாக பிரிந்து செல்கிறார். அதன்பிறகு மீனாவை ரஜினி 2-வது திருமணம் செய்து கொள்கிறார். இது குஷ்புவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ரஜினியை பழிவாங்கும் வேலையில் இறங்குகிறார். ரஜினிக்கு எதிரிகளாக இருக்கும் வில்லன்களும் குஷ்புவுக்கு உதவுகிறார்கள். அதில் அவர் வென்றாரா? என்பது கதை என்று தகவல் பரவி வருகிறது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் முடிந்துள்ளது.


அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்