சினிமா செய்திகள்

விஷாலின் வீரமே வாகை சூடும்

விஷால் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘வீரமே வாகை சூடும்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அறிமுக டைரக்டர் து.பா.சரவணன் இயக்குகிறார். டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, ஆர்.என்.ஆர்.மனோகர், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது.