சினிமா செய்திகள்

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'லத்தி' படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகிற 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்