சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம்

இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம் தயாராக உள்ளது.


மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியானது. கணியன் பூங்குன்றன் என்ற போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் வந்தார். கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பாக்யராஜ், பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தனர்.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விஷால்-மிஷ்கின் கூட்டணியில் தயாராக உள்ளது என்று ஏற்கனவே தகவல் கசிந்தது.

இந்த நிலையில் விஷால் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் முடிந்து 15-வது ஆண்டு தொடங்கி இருப்பதையொட்டி துப்பறிவாளன்-2 படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் விஷால் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவை நேரில் சந்தித்த புகைப்படத்தை விஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை போலவே துப்பறிவாளன் இரண்டாம் பாகமும் திகில் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே எந்திரன், சண்டக்கோழி, சிங்கம், விஸ்வரூபம், சாமி, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்டநாள் முதல், மாதவனின் யாவரும் நலம் படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராக உள்ளன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை