சினிமா செய்திகள்

எப்.ஐ.ஆர் பட வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

எப்.ஐ.ஆர் பட வதந்திக்கு விளக்கம் அளித்து நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

தினத்தந்தி

கொரோனாவால் பல படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்.ஐ.ஆர் படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "'ஓ.டி.டி தளத்தில் எப்.ஐ.ஆர்' திரைப்படம் நேரடியாக வெளியாக இருப்பதாக வரும் தகவல்கள் தவறானது. வெளியீடு சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டுகிறேன்.

நான் எப்போதும் சொல்வது போல், ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் 'எப்.ஐ.ஆர்' திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிட முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன். திரையரங்க அனுபவத்துக்காக இந்த படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளார். எப்.ஐ.ஆர் படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார்.

கவுதம் மேனன், கவுரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு