சினிமா செய்திகள்

``ஒருமுறை இந்த கோவிலுக்கு வாங்க... மன அமைதி கிடைக்கும்’’ - நடிகை பிரியா ஆனந்த்

மன அமைதி தேடுபவர்கள் நிச்சயம் இந்தத் திருத்தலத்திற்கு வர வேண்டும் என்று பிரியா ஆனந்த் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பிரபல நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.

தனது தாயார் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து அவர் வழிபட்டார். கோவிலில் இருந்த பூனைக்குட்டிகளைக் கொஞ்சி மகிழ்ந்தவர், அங்கு வந்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரின் உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்தார்.

கோவில் பராமரிப்பு சிறப்பாக உள்ளதாகவும், மன அமைதி தேடுபவர்கள் நிச்சயம் இந்தத் திருத்தலத்திற்கு வர வேண்டும் என்றும் பிரியா ஆனந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.