சினிமா செய்திகள்

‘‘விஸ்வரூபம்-2’ பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும்’’

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் முடிந்து திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் இதன் டிரெய்லரை வெளியிட்டனர்.

விஸ்வரூபம்-2 தமிழ் டிரெய்லரை சுருதிஹாசனும் தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் இந்தியில் அமீர்கானும் வெளியிட்டார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது.

அதுபோல் விமர்சனங்களும் கிளம்பின. ஆகஸ்டு 10ந் தேதி விஸ்வரூபம்-2 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் விஸ்வரூபம்-2 வெளியாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்கள் அடுத்தவாரம் வெளியாகும் என்று கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

அவர் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிடுகின்றனர். விஸ்வரூபம் படம் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் கடந்த 2013ல் வெளியானது. முதல் பாகம் தயாரானபோதே இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இரண்டாம் பாகம் படத்தை கமல்ஹாசனே டைரக்டு செய்துள்ளார். பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயார் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறி உள்ளார். கர்நாடகாவில் கமல்ஹாசன் படங்களை திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளதால் விஸ்வரூபம்-2 அந்த மாநிலத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த படம் திரைக்கு வந்த பிறகு சபாஷ்நாயுடு, இந்தியன்2 பட வேலைகளை தொடங்க திட்டமிட்டு உள்ளார். சபாஷ் நாயுடு படத்தின் சில காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்