சினிமா செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை:

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது நண்பர்கள் உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உள்ள ராகினி திவேதி அளித்த தகவலின் பேரில் மும்பையில்நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் அவரது மைத்துனர் ஆதித்யா அல்வா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக பெங்களூரு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

"ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ளார். விவேக் ஓபராய் அவரது உறவினர், அல்வா இருக்கிறார் என்று எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன. எனவே நாங்கள் சரிபார்க்க விரும்பினோம். எனவே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது, குற்றப்பிரிவுக் குழு மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது" என்று இணை ஆணையர் குற்ற சந்தீப் பாட்டீல் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது