சினிமா செய்திகள்

"நடிகர் மகேஷ் பாபுவுடன் நடிக்க ஆசை" - நடிகை ரோஜா

நடிகை ரோஜா தனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரோஜா, தற்போது ஆந்திராவில் மந்திரியாக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு சினிமா ஆர்வம் குறையவில்லை.

இதுகுறித்து ரோஜா கூறும்போது, "சினிமாவில் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி இப்போதைய இளம் கதாநாயகர்கள் அனைவரும் மிகவும் திறமையான நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து விடுகிறது. அதை அவர்களும் திறமையாக உபயோகித்துக் கொண்டு முன்னேறுகிறார்கள்.

இந்த தலைமுறை ஹீரோக்களில் யாரும் செய்யாத சாதனையை பிரபாஸ் செய்துள்ளார். 'பாகுபலி 1, 2' படங்களில் நடித்து சரித்திர சாதனை நிகழ்த்தி உள்ளார். 'ஆதி புருஷ்' படத்தில் ராமபிரானாக நடித்துள்ளார்.

சமூக கதைகள், சரித்திர கதைகள், புராண கதைகள், பிக்ஷன் இப்படி வித்தியாசமான கதைகளில் நடித்துக் கொண்டே தனது ஜெனரேஷனில் எந்த ஹீரோவும் செய்யாத சாதனையை அவர் செய்துள்ளார். ஒரு நடிகையாக இதை பார்க்கும்போது பெருமைப்படுகிறேன்.

மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது. குறிப்பாக மகேஷ்பாபுவுடன் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நிச்சயம் அம்மாவாக நடிக்க மாட்டேன். அக்கா அல்லது அண்ணி போன்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து