சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஆளும் கட்சியான அ.தி. மு.க. சார்பில் கடந்த 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.
அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர்கள் என பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் நீடித்தன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.
காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் அவ்வப்போது டுவிட் பதிவு செய்து வருகிறார்
சமீபத்தில் அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள், அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள் என கூறி இருந்தார்.
தற்போது நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா? என நடிகர் விவேக் பதிவு செய்து உள்ளார்.