சினிமா செய்திகள்

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ்' படத்தின் 2 நாட்கள் வசூல் எவ்வளவு?

ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்றுமுன் தினம் உலகம் முழுவதும் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்றுமுன் தினம் உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

நேற்றுமுன் தினம் ஒரே நாளில் உலகம் முழுவதும் 'ஆதிபுருஷ்' படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' நான்காவது இடத்தில் உள்ளது.

இந்தப் படம் 2 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், சனிக்கிழமையான நேற்று 100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்