சினிமா செய்திகள்

லேபில்னா என்ன..? வைரலாகும் வீடியோ

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'.

தினத்தந்தி

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், லேபில் என்றால் என்ன என்பது குறித்து பொது மக்களிடம் படக்குழு கேள்வி கேட்டுள்ளது. அதற்கு ஒரு சிலர், லேபில் என்பது புத்தகத்தில் ஒட்டுவது என்றும் துணியுடன் வருவது என்றும் கூறினர்.

இதே கேள்வியை வட சென்னை மக்களிடம் கேட்டபோது அவர்கள், "லேபில் என்பது ஒரு கெத்து. இந்த இடத்தில் யார் பெரிய ஆளோ அவரே லேபில். வட சென்னையை பொறுத்தவரை யார் லேபில் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள். நாம் யாரை பார்த்து பயப்படுகிறோமோ அவர்தான் லேபில்" என்று கூறினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

'லேபில்' வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை