படத்தின் முக்கிய காட்சிகளும், விஜய் நடித்த மிக பயங்கரமான ஒரு சண்டை காட்சியும் ஜார்ஜியாவில் படமானது. கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு குழுவினர் அவசரம் அவசரமாக அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர்.இதையடுத்து சென்னை அருகில் உள்ள பூந்தமல்லியில், பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமான ஒரு அரங்கு அமைக்கப்பட்டது. அதில் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது
தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இது ஒரு குடும்ப காதல் கதை. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் டைரக்டு செய்கிறார்.