சினிமா செய்திகள்

ஆரம்பகாலத்தில் பணம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன்: நடிகை சமந்தா

ஆரம்பகாலத்தில் பணம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன் என்று நடிகை சமந்தா கூறினார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சமந்தா கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். ஆனால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னால் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், நான் படிப்பில் முதல் மாணவியாக இருந்தேன். ஆனாலும் பணம் இல்லாததால் படிப்பை இடையிலேயே விட்டு விட வேண்டிய நிலை வந்தது. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு பெரிய விழாக்களுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் வெல்கம் கேர்ள் பணியைக் கூட செய்தேன். அந்த வேலைக்காக எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வருவாயாக கிடைத்தது.

இன்னும் சில நேரங்களில் பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன். அப்படி 2 மாதங்கள் கஷ்டப்பட்டேன். ஒரு சிறிய வருவாய்க்காக மாடலிங் செய்யலாம் என நினைத்த சமயத்தில் என்னை என் குடும்ப உறுப்பினர்களே உனக்கு இது தேவையா என்று பின்னோக்கி இழுத்தனர். சமீபத்தில் கூட மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டேன். எனது நண்பர்கள், டாக்டர்கள் உதவியோடு அந்த பிரச்சினையிலிருந்து மீண்டேன் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்