சினிமா செய்திகள்

"தளபதி வந்தா தள்ளி தானே ஆகணும்" - 'ஜனநாயகன்' வரவால் மாறிய 'இம்மோர்டல்' ரிலீஸ் தேதி

‘இம்மோர்டல்’ படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார்.

சென்னை,

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'இம்மோர்டல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’

முன்னதாக, இப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதே நாளில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘இம்மோர்டல்’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தளபதி வந்தா

இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் ஜி.வி. பிரகாஷ், "தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்! அதுவும் ஒன் லாஸ்ட் டைம். 'ஜனநாயகன்' படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கயாடு லோஹர்

‘இம்மோர்டல்’ படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT