சினிமா செய்திகள்

ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' பட ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த படக்குழு

'தி கேர்ள் பிரண்ட்' படம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, படத்தின் ரிலீஸ் தேதியை நாளை மாலை 03.06 மணியளவில் புரோமோவுடன் அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்