சினிமா செய்திகள்

'கருப்பு' படத்தின் ரிலீஸ் எப்போது.. வெளியான தகவல்

சூர்யாவின் கருப்பு படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் வெளியாவதால், பொங்கல் பண்டிகையில் 'கருப்பு' ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 'கருப்பு' திரையரங்களில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்