சினிமா செய்திகள்

நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர் ரஜினி காணொலி மூலம் பேச்சு

நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர் என ரசிகர்களிடம் ரஜினி காணொலி மூலம் பேசினார். #Rajinikanth #RajiniMakkalMandram

தினத்தந்தி

சென்னை

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் தூத்துக்குடி ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரசிகர்களிடம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருந்தால்போதும். மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் . உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்திருங்கள். எனக் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை