சினிமா செய்திகள்

மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தெரிவித்து இருந்தார்.

தினத்தந்தி

இதுபோல் மேலும் சில நடிகைகளும் இதே நோயில் சிக்கியதாக கூறினார். இப்போது நடிகை ஸ்ரத்தா கபூரும் மன அழுத்த வியாதியால் கஷ்டப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கில் சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரத்தா கபூர் கூறியதாவது:-

எனது நடிப்பில் ஆஷிகி 2 என்ற இந்தி படம் 2013-ல் திரைக்கு வந்தது. அப்போது எனக்கு மன அழுத்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்போதும் அதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது பரவாயில்லை. கொஞ்சம் குறைந்துள்ளது. முழுமையாக அதில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு நிலையில் பரபரப்பு மன அழுத்தம் போன்றவை பின்னால் துரத்திக்கொண்டே இருக்கும். அதில் இருந்து விடுபட மருந்துகளை தேடி போவதில் பிரயோஜனம் இல்லை.

நான் தினமும் யோகா, தியானம் செய்கிறேன். பாடல்கள் கேட்கிறேன். இவற்றில் மனதை செலுத்தி மனஅழுத்தத்தில் இருந்து விடுபட கஷ்டப்பட்டு போராடுகிறேன். இன்றுவரை அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு ஸ்ரத்தா கபூர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு