சினிமா செய்திகள்

ஏன் அந்த ஸ்டேஜ்லயே உக்காந்துற வேண்டியதுதானே... பார்த்திபனிடம் கமெண்ட் அடித்த சாய் பல்லவி

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது விழாவில் நடிகரும் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றார்.

தமிழ்நாடு அரசு அறிவித்த 2016-2022 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கினார். இதில் நடிகரும் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றார். சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் பார்த்திபன் விருதுகளை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் விருது வாங்க ஒவ்வொரு முறையும் மேடைக்கு சென்று விட்டு வந்தார். இதனை கவனித்த நடிகை சாய்பல்லவி, நடிகர் பார்த்திபனிடம், “ஏன் அந்த ஸ்டேஜ்லயே ஒரு சேர் போட்டு உக்காந்துகிட்டு எல்லா விருதுகளையும் வாங்கிட்டு வந்திருக்க வேண்டியது தானே?” என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார்.

இதனை தனது எக்ஸ் பதிவில் நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் பதிவிட்டுள்ளார். பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழக அரசின் பத்து விருதுகளை ஒன்றன் பின் ஒன்றாக நான்

மேடை ஏறி

    இறங்கி

மேடை ஏறி

    இறங்கி

மேடை ஏறி

    இறங்கி

மேடை ஏறி

    இறங்கி

வாங்கிக்கொண்டு வந்து அமர்வதைப் பார்த்த இத்தலைமுறையின் மிகச் சிறந்த நடிகையர்களில் ஒருவரானவர் அடித்த பெஸ்ட் கமெண்ட் இது!

இதனை என் உதவியாளரான சஞ்சனா எடுத்து எடிட்டிங் செய்து இசை கூட்டி அனுப்பினார். பொதுவாக உதவியாளர்களை ஊக்கப்படுத்த — அதை மெதுவாகச் செய்யாமல் உடனுக்குடன்.”

என்று பதிவிட்டுள்ளார்.