சினிமா செய்திகள்

விஜய் படத்தில் ‘கரு கருப்பாயி பாடல்’ காப்புரிமை கேட்காதது ஏன்?.. தேவா சொன்ன காரணம்

காப்புரிமை பற்றி சிந்திப்பதே கிடையாது என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

தினத்தந்தி

கரூர்,

இசையமைப்பாளா தேவா, கரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நான் ஏராளமான மெல்லிசை பாடல்கள், குத்துப்பாட்டு, கானா பாட்டு, மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறேன், பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வேகமாக பரவி வருகின்றன. தேவா கானா பாடல் மட்டும்தான் பாடுவா என நிறைய பே நினைக்கிறாகள். கானாவும், மெல்லிசை பாடல்களும் எனது இரு கண்கள். ஆனால், கானா பாடல்கள் மூலம்தான் நான் உலகளவில் பிரபலமானேன். தற்போது நிறைய பே பாடல்களுக்கு காப்புரிமை கேட்கிறாகள். ஆனால், நான் அதைப்பற்றி சிந்திப்பதே கிடையாது. தற்போது 3 புதிய படங்களுக்கு இசையமைக்கிறேன். பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறாகள் என்பதற்காக இப்போதுள்ளவாகள் நன்றாக இசையமைக்கவில்லை எனக் கூற முடியாது .

நான் காப்புரிமை எதுவும் கேட்பது இல்லை. இப்போ என்னுடைய பழைய பாடல்கள் எல்லாம் இப்போது ஹிட்டாகி வருகிறது. கரு கருப்பாயி என்ற பாடல் இப்போ ஒரு படத்தில் (விஜய் நடித்த லியோ படத்தில்) வந்து பயங்கர ஹிட் ஆனது. அந்த பாடல் 2000ல் நான் இசையமைத்தது. சமீபத்தில் ஒரு மால் ஒன்றிற்கு சென்றேன். அப்போது , ஒரு சின்ன பையன் வந்தான். அந்த சிறுவனின் தந்தை என்னை பார்த்ததும், கரு கருப்பாயி பாடலுக்கு இசை அமைத்தது இவர்தான் என்று தனது மகனிடம் கூறினார். இதைக்கேட்ட அந்த சிறுவன்..என்னை பார்த்து கை கொடுத்தான். இப்போ இருக்க பசங்களுக்கும் தெரிகிறது அல்லவா..அந்த பாடலுக்கு நான்தான் இசை அமைத்தது என்று. அதனால்தான் நான் எந்த பாடலுக்கும் காப்புரிமை கேட்பது இல்லை என்றார்.

பிரபு தேவா நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான "ஏழையின் சிரிப்பில்" என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடல் கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு கரு கருப்பாயி பாடல் 2 கே கிட்ஸ்கள் மத்தியிலும் வைரல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்