சினிமா செய்திகள்

சந்தானம் படத்துக்கு ‘டிக்கிலோனா’ என்று பெயர் வைத்தது ஏன்? டைரக்டர் விளக்கம்

‘டிக்கிலோனா’ என்று சந்தானம் நடிக்கும் படத்துக்கு பெயர் வைத்தது ஏன் என்று டைரக்டர் விளக்கமளித்துள்ளார்.

தினத்தந்தி

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் கதாநாயகன் ஆனபின், குடும்பம் முழுவதும் பார்க்கும் வகையில், படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு, டிக்கிலோனா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பிரபல எழுத்தாளரும், பல படங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் உதவியாக இருந்தவருமான கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். கோட்டப்பாடி ஜே.ராஜேஷ், சினிஸ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்துக்கு, டிக்கிலோனா என்று பெயர் வைத்திருப்பது பற்றி இவர்கள் கூறுகிறார்கள்:-

ஒரு படத்துக்கு தலைப்பு என்பது சிலைக்கு தலை செய்வது போல...படத்துக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். அதனால்தான் படத்தின் பெயரை தேர்வு செய்வதில் காலதாமதம் ஆனது. இந்த படத்துக்கு, டிக்கிலோனா என்று பெயர் வைத்ததன் காரணம், படம் பார்க்கும்போது புரியும்.

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் கோடை விடுமுறை விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது