கோப்புப்படம்  
சினிமா செய்திகள்

‘ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறேனா? - சந்தானம் பதில்

எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன் என்று சந்தானம் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சின்னத்திரையில் ஜொலித்த சந்தானம், சிம்புவின் மன்மதன் படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கிய அவர், தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.

இதற்கிடையில் வெள்ளித்திரையில் தனக்கு அறிமுகம் தந்த சிம்பு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் நடிக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2' படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய... படம் தானே... சொல்லிட்டு தான் செய்வேன்" என சந்தானம் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து