சினிமா செய்திகள்

தேர்தலுக்கு பின் வெளியாகிறதா ஜனநாயகன்?

சென்சார் சான்றிதழ் வருகிற 17-ம் தேதிக்கு முன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன்’ படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த பிறகு சென்சார் சான்றிதழ் மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பு கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஜனநாயகன் திரைப்படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு , பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT