சினிமா செய்திகள்

திருமணத்தால் சினிமா வாழ்க்கை பாதிப்பா? காஜல் அகர்வால் விளக்கம்

திருமணம் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த காஜல் அகர்வால் 2020-ல் மும்பை தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததுள்ளன என்றும், இளம் கதாநாயகர்கள் அவரோடு ஜோடி சேர மறுப்பதால் வயதான நடிகர்கள் படங்களில் நடிக்கிறார் என்றும் தகவல் பரவி உள்ளது. தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் திருமண வாழ்க்கையால் சினிமா வாழ்க்கை பாதித்துள்ளதா என்பதற்கு காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. திருமணம் ஆனதும் நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை தற்போது இல்லை. நடிகைகளின் சொந்த வாழ்க்கை முடிவுகள் சினிமாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ரசிகர்கள் புரிந்துள்ளனர். எனவே சொந்த வாழ்க்கை மாற்றங்கள் பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தலாம். திருமணத்துக்கு பிறகு கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன்'' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்