சினிமா செய்திகள்

ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை- நடிகர் கமல்ஹாசன்

ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை; மக்கள் நலன்தான் முக்கியம் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan

தினத்தந்தி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.பிப்.21-ம் தேதி கட்சி, சின்னத்தை பதிவு செய்து அறிவிப்பேன். அனைத்து துறைகளும் லாபம் ஈட்டும் துறையாக இருக்க முடியாது, மக்களுக்கு சேவையாற்றும் துறையாக இயங்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டும், எல்லா இடங்களிலும் ஒலிபரப்பக் கூடாது. தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை; எழுந்து நிற்பது எனது கடமை.சில பிரச்சினைக்கு தீர்வுகளை சொல்லாமல், செய்து தான் காட்ட வேண்டும் .

தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன் . எதுவந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன்; உடைப்பது வேலை அல்ல; கட்டுவதுதான் எனது வேலை. ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை; மக்கள் நலன்தான் முக்கியம். கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

#KamalHaasan #Vijayendrar #KamalhaasanPoliticalEntry #LocalBodyElection #PoliticalParty

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்