சினிமா செய்திகள்

இந்தியன் படத்தின் 3-ம் பாகம் வருமா?

தினத்தந்தி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல்பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அடுத்த சில வாரங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை படமான காட்சிகளை கமல்ஹாசன் பார்த்து மகிழ்ந்து ஷங்கருக்கு கைக்கடிகாரம் பரிசு வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியன் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, "இந்தியன் 3-ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன'' என்று தெரிவித்து உள்ளார். இந்தியன் 2-ம் பாகம் வெளியானதும் 3-ம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு இந்தியன் 3-ம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்