சினிமா செய்திகள்

நாகசைதன்யாவுடன் மீண்டும் இணைவாரா...? விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா..!

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவாகரத்து குறித்த பதிவை நீக்கியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

இந்த நிலையில் திடீரென சமந்தாவும் நாக சைதன்யாவும் "நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நாங்கள் இருவரும் பிரிகிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.

அது எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்' என குறிப்பிட்டு ஒரே நேரத்தில் தங்களது விவாகரத்து முடிவை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.

இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே நாகசைதன்யா கூறும்போது பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் சமீபத்தில் நாக சைதன்யா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கியுள்ளார். இதனால் நாகசைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்