சினிமா செய்திகள்

நடிகை அஞ்சலிக்கு வில்லி வாய்ப்புகள்

தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி வில்லி வேடம் ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலிக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தங்கள் படங்களில் கதாநாயகியாக அவரை ஒப்பந்தம் செய்ய இளம் நடிகர்கள் தயங்குகிறார்கள்.

இதையடுத்து என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கும் நிலைக்கு இறங்கி வந்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் வில்லி வேடம் ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதை பிடித்து இருந்ததால் வில்லியாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இன்னொரு படத்திலும் வில்லியாக நடிக்க அஞ்சலியிடம் பேசி வருகிறார்கள். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இதுதவிர மேலும் சில படங்களிலும் வில்லியாக நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து