இந்த போட்டியில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்களை தோற்கடித்து இந்த பட்டத்தை அவர் வென்று இருக்கிறார்.
இந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர். ஹிருத்திக் ரோஷன் இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கும் ஆடை வடிவமைப்பாளர் சுசானாவுக்கும் 2000-ல் திருமணம் நடந்ததது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2014-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.
ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்கனா ரணாவத்துக்கும் ஏற்கனவே காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டனர். வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்கள்.
இது பட உலகில் பர பரப்பை ஏற்படுத்தியது. ஹிருத்திக் ரோஷன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சூப்பர் 30 படம் ரூ.140 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது வார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.