சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வெளியானது யாத்ரா 2

நடிகர் ஜீவா, மம்மூட்டி நடித்த யாத்ரா 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை, 'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் உருவாகி வெளியானது. 

மஹி வி ராகவ் இயக்கியுள்ள 'யாத்ரா-2' படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகிய இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வெற்றியைக் குவிக்கவில்லை. தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்