சினிமா செய்திகள்

ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை

தங்கமுலாம் பூசப்பட்ட கேக் குறித்து இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினத்தந்தி

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா நேற்று தங்க முலாம் பூசப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் இந்த கேக்கை ஊர்வசிக்கு பரிசளித்துள்ளார்.

ஊர்வசி தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து 'செகண்ட் டோஸ்' என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.3 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறிய யோ யோ ஹனிசிங், "அவரது பிறந்தநாளை சிறப்பு நிகழ்வாக மாற்ற அவருக்கு தனித்துவமான பரிசு வழங்க முடிவு செய்தேன். அதற்காக அவருக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை பரிசாக வழங்கினேன்.

எந்த நடிகரும் அவரது சக நடிகருக்கு செய்யாத இந்த சிறப்பான தருணம் வரலாற்றில் இடம் பெற வேண்டும். ஊர்வசி வேலையில் மிகவும் புத்திசாலி. மேலும் இந்த பரிசுக்கு அவர் முழுவதும் தகுதியானவர்" என்று கூறினார். தங்கமுலாம் பூசப்பட்ட இந்த கேக் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

"ரூ.3 கோடி மதிப்புள்ள கேக்கினால் என்ன பயன்..? பணம்தான் விரயம்" என்றும் "இந்த கேக்கை சாப்பிடுவதா? அல்லது பத்திரமாக வைப்பதா?" என்றும் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு