வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகர்கள் ஆனதால் நகைச்சுவையில் ஏற்பட்ட வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பி இருக்கிறார். அவர் கைவசம் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. விஜய்யின் சர்கார், அஜித்குமாரின் விஸ்வாசம் படங்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலாவில் கல்யாண வயசு டூயட் பாடலும் பாடினார்.