சினிமா செய்திகள்

“ஆர்யா போல் ஒரு நடிகரை பார்க்க முடியாது” மகிமா நம்பியார் சொல்கிறார்

ஆர்யா கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்து, சாந்தகுமார் டைரக்டு செய்த ‘மகாமுனி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதில், படத்தின் கதாநாயகி மகிமா நம்பியாருக்கு மகிழ்ச்சி.

தினத்தந்தி

மகாமுனி படத்தை பற்றியும், ஆர்யாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்தது பற்றியும் மகிமா உற்சாகத்துடன் கூறியதாவது:-

என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது, மகாமுனி. திரையில் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது.

ஆர்யா போல் ஒரு அபூர்வ நடிகரை பார்க்க முடியாது. அவரை ஒரு பிறவி நடிகர் என்று சொல்லலாம். நான் நடிக்க வேண்டிய காட்சிகளை அவரே நடித்து காட்டினார். என் நடிப்பு சிறப்பாக இருந்தால்தான் எதிரில் நிற்கும் அவர் நடிப்பு எடுபடும் என்று சொல்வார். இப்படி மெனக்கெடும் நடிகரை நான் பார்த்ததில்லை.

என் அடுத்த படமாக விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ள அசுரகுரு வெளிவர இருக்கிறது. அந்த படத்திலும் என் நடிப்பை பார்த்து பாராட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்