சினிமா செய்திகள்

டாட்டூ போடப்போகும் இடத்தை தெரிவித்த நடிகை: சம்பவ இடத்திற்கு பாய்ந்து வந்த வாலிபர்..அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்

கேரளாவில் பிரபலமான நடிகை என்பதால் இவரை சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.

திருவனந்தபுரம்,

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நமிதா பிரமோத். கேரளம் மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த இவர். டிராபிக் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மலையாளதில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் என் காதல் புதிது நிமிர், அவள் பெயர் ரஜினி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவில் பிரபலமான நடிகை என்பதால் இவரை சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.

இந்தநிலையில், நடிகை நமிதா பிரமோத், டாட்டூ போட்டுக்கொள்ளப்போவதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தனது பதிவில் டாட்டூ போடப்போகும் இடத்தையும் தெரிவித்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது போன்று, சம்பவ நாளில் குறிப்பிட்ட டாட்டூ ஸ்டூடியோவுக்கு சென்றார்.

அப்போது அங்கு எர்ணாகுளத்தை சேர்ந்த லிபின் என்ற வாலிபர் சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் நடிகை நமிதா பிரமோத்தை வழிமறித்து நிறுத்தி டாட்டூ போட்டுக்கொள்ளக்கூடாது என்று கூறி மிரட்டி இருக்கிறார்.

அதற்கு நடிகை டாட்டூ போட்டுக்கொள்வது தனது தனிப்பட்ட விஷயம் என்று கூறி டாட்டூ ஸ்டூடியோவை நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் அந்த வாலிபர் விபின் நடிகையை செல்லவிடாமல் தடுத்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பாலாரி வட்டம் போலீஸ் நிலையத்தில் நடிகர் புகார் செய்தார். அவர் தனது புகாரில் டாட்டூ போடுவதற்காக சென்ற தன்னை வாலிபர் விபின் தடுத்து நிறுத்தி தகராறு செய்து மிரட்டியதாகவும் தவறான முறையில் தொட்டதாகவும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி எர்ணாகுளத்தில் இருந்த விபினை கைது செய்தனர்.

கேரளாவில் டாட்டூ குத்த சென்ற நடிகையை வாலிபர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.