பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது ரஜினி நடிக்கும் 167-வது படமாகும்.
ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் பேட்ட படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.