கதையின் கரு: நகரில், இளைஞர்கள் மத்தியில் போதை மருந்து பழக்கம் அதிகமாகி வருகிறது. அதன் தடுப்பு பிரிவு அதிகாரி அருண் விஜய்யின் தம்பியே போதை மருந்துக்கு அடிமையாகி, காணாமல் போகிறார். அதனால், போதை மருந்தை வினியோகிக்கும் ஆசாமி யார்? என்ற தேடுதல் வேட்டையை அருண் விஜய் தீவிரப்படுத்துகிறார். இந்த வேட்டையில், ஒரு லாரி நிறைய போதை மருந்து பிடிபடுகிறது.