திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
"போர்த் ப்ளோர்"
எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான படம் ‘போர்த் ப்ளோர்’. இந்த படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் சன் நெக்ஸ்ட், சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
"சீதா பயணம் சன் நெக்ஸ்ட்"
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'சீதா பயணம்' . இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"பார்டர் 2"
அனுராக் சிங் இயக்கத்தில் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான படம் பார்டர் 2. இதில் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவருடன் வருண் தவான், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் அஹான் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
யதுநாத் மாருதி ராவ் எழுதி இயக்கிய திரைப்படம் விஷ்ணு வின்யாசம். இதில் ஸ்ரீ விஷ்ணு, நயனா சாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சத்யா, முரளி ஷர்மா, பிரம்மாஜி, பிரவீன், சத்யம் ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"பீக்கி பிளைண்டர்ஸ்: தி இம்மார்டல் மேன்"
டாம் ஹார்ப்பர் இயக்கிய படம் பீக்கி பிளைண்டர்ஸ்: தி இம்மார்டல் மேன். இதில் சிலியன் மர்பி நாயகனாக நடிக்க , சோபி ரண்டில் , நெட் டென்னேஹி , பாக்கி லீ , இயன் பெக் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"அமராவதிக்கு ஆஹ்வானம்"
"அமராவதிக்கு ஆஹ்வானம்" என்பது தெலுங்கில் வெளியான திகில் திரைப்படம் ஆகும். இதில் சுரேகா வாணி, சுப்ரிதா, தன்யா பாலகிருஷ்ணா மற்றும் எஸ்தர் நோரோன்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ், பேய் அம்சங்கள் மற்றும் கமர்ஷியல் எலிமென்ட்ஸ் கலந்து உருவான இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"கசராகோட் எம்பஸி"
கசராகோட் எம்பஸி என்பது வெளிநாட்டில் வேலை பார்க்க செல்லும் கனவு கொண்டவர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லக்கூடிய படமாகும். இதில் இந்திரஜித் சுகுமாரன், அபர்ணா பாலமுரளி, சுராஜ் வெஞ்சரமூடு, ஹரிஷ் பேரடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"லேண்ட்லார்ட்"
சந்தோஷ் பிரதாப், அஷ்வின் குமார், தீப்தி சதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லேண்ட்லார்ட். இப்படம் ஒரு வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகையாளர்களுக்கு இடையிலான உறவுகள், பண பிரச்சினைகள், மனித மனநிலைகளை பற்றி பேசக்கூடிய படமாகும். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"இன்வின்சிபிள் சீசன் 4 "
‘இன்வின்சிபிள்’ என்ற பிரபல அனிமேஷன் தொடராகும். இந்த தொடரின் 4வது சீசன் தற்போது பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த இந்த சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
| படங்கள் | ஓடிடி தளங்கள் |
|---|---|
| போர்த் ப்ளோர் | சன் நெக்ஸ்ட், சிம்பிலி சவுத் |
| சீதா பயணம் | சன் நெக்ஸ்ட் |
| பார்டர் 2 | நெட்பிளிக்ஸ் |
| விஷ்ணு வின்யாசம் | பிரைம் வீடியோ |
| பீக்கி பிளைண்டர்ஸ்: தி இம்மார்டல் மேன் | நெட்பிளிக்ஸ் |
| அமராவதிக்கு ஆஹ்வானம் | ஆஹா |
| கசராகோட் எம்பஸி | ஜீ5 |
| லேண்ட்லார்ட் | ஜீ5 |
| இன்வின்சிபிள் சீசன் 4 | பிரைம் வீடியோ |