திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
சோனி நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'அனகோண்டா'. இந்த படத்தை தி அன்பெயரபிள் வெயிட் ஆப் மாஸிவ் டேலண்ட் படத்திற்கு பெயர் பெற்ற டாம் கோர்மிகன் இயக்கியுள்ளார். இதில், அண்ட்-மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 27ந் தேதி பிரைம் வீடியோ ரென்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் ஆகியோர் இயக்கத்தில் வெளியான படம் நகைச்சுவை அனிமேஷன் படம் ஜூடோபியா 2. இந்த படம் உலகளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த 27ந் தி பிரைம் வீடியோ ரென்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் வா வாத்தியார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த 28ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சாம்பியன். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கிய இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (29ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், இதில் ரன்வீர் சிங்கின் ஜோடியாக நடித்துள்ளார். மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (30ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த சர்வம் மாயா படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (30ந் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.