image courtecy:instagram@karanjohar 
ஓ.டி.டி.

'கில்' படத்தின் ஓ.டி.டி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

கரண் ஜோஹரின் 'கில்' படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர். தற்போது இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான 'கில்' படத்தை தயாரித்துள்ளார். நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் உருவான இந்தப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கணிசமான தொகைக்கு 'கில்' படத்திற்கான ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. கீனு ரீவ்ஸ் நடித்த 'ஜான் விக்' தொடரை இயக்கிய 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப்படத்தை ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்