ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியான திரிப்தி டிம்ரியின் டார்க் காமெடி திரில்லர்

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தி டார்க் காமெடி திரில்லர் திரைப்படமான 'மா பெஹன்' தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

பாராட்டப்பட்ட இயக்குநரின் புதிய முயற்சி

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு அவர் இயக்கிய துமாரி சுலு மற்றும் ஜல்சா ஆகிய திரைப்படங்கள் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

நட்சத்திர பட்டாளம்

இந்தப் படத்தில் திரிப்தி திம்ரியுடன் இணைந்து மாதுரி தீட்சித், சமூக ஊடகப் பிரபலமான தர்ணா துர்கா மற்றும் ரவி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.