சமீப காலமாக உண்மை சம்பவங்கள், பயோபிக் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, பரபரப்பான குற்றச் சம்பவங்கள் மற்றும் காவல்துறை பின்னணியில் உருவாகும் கதைகள் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது ஓடிடி ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள வெப் சீரிஸ் தான் ’இன்ஸ்பெக்டர் அவினாஸ் சீசன் 2’(Inspector Avinash Season 2).
உத்தரப் பிரதேசத்தில் பணியாற்றிய பிரபல என்கவுன்ட்டர்ஸ்பெஷலிஸ்ட் அவினாஸ் மிஷ்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. தனது காவல்துறை பணிக்காலத்தில் 150 என்கவுன்ட்டர்களை செய்து கவனம் பெற்ற அதிகாரியின் உண்மைக் கதையை இந்த சீரிஸ் சித்தரித்திருக்கிறது.
இந்த தொடரை இயக்குநர் நீரஜ் பதக் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகர் ரண்தீப் ஹுடா இன்ஸ்பெக்டர் அவினாஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஊர்வசி ரவுடேலா, அமித் சியால், அபிமன்யு சிங், ஜாகிர் உசேன், ரஜ்னீஷ் டுகல் மற்றும் பிரெடி தருவாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மொத்தம் 10 எபிசோடுகளைக் கொண்ட இந்த கிரைம் ஆக்சன் திரில்லர் தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.