ஓ.டி.டி.

"சக்தித் திருமகன்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த மாதம் சக்தித் திருமகன் என்ற படம் வெளியானது. விஜய் ஆண்டனி தயாரித்திருந்த இந்த படத்தை அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'பத்ரகாளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஊழலுக்கு எதிராக, ஒரு தனி மனிதனின் பழிவாங்கல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வருகிற 24ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்