ஓ.டி.டி.

ஒரு தலை… பல ரகசியங்கள் - ஓடிடியில் மிஸ்டரி கிரைம் தொடர்: எதில் பார்க்கலாம்?

ஓடிடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை,

வழக்கம்போல் இந்த வாரமும் பல புதிய திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. அதில், தற்போது கவனம் ஈர்த்து வரும் மிஸ்டரி கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் ‘முத்து என்கிற காட்டான்’.

மலைப்பகுதியில் உடலின்றி கிடைக்கும் மனிதத் தலை யாருடையது? அவரைக் கொன்றது யார்? உடலின் மீதிப் பகுதி எங்கே? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. கேஸ்கள் இல்லாததால் மூடப்படவிருந்த காவல் நிலையத்தில் இந்த சம்பவம் புதிய திருப்பத்தை உருவாக்குகிறது.

விசாரணை மேற்கொள்ளும் போலீசார், இறந்தவர் ஒருகாலத்தில் கடிகார மேக்கானிக், யானை பயிற்சியாளர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதுபோன்ற அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மணிகண்டன் இயக்கியுள்ளார். மேலும் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதல் சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.