ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் மம்முட்டியின் 'டர்போ'

மம்முட்டியின் 'டர்போ' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டர்போ'. இப்படத்தை வைசாக் இயக்கினார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து 'புலிமுருகன்' திரைப்படத்தை இயக்கினார். 'டர்போ' படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதி இருந்தார். இதில், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர், சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர்.

கிறிஸ்டோ சேவியர் இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'டர்போ' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'டர்போ' படம் சோனி லிவ் ஓடிடியில் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மம்முட்டி நடிப்பில் வெளியான 'பிரம்மயுகம்' என்ற திகில் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து