முன்னோட்டம்

இமைக்கா நொடிகள்

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி இல்லை

இமைக்கா நொடிகள் படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி இல்லை. விஜய் சேதுபதி, சஸ்பென்ஸ் ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார், டைரக்டர் அஜய் ஞானமுத்து ஆகிய இருவரும் கூறியதாவது:-

பெங்களூரில் வசிக்கும் சி.பி.ஐ. அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்தனுக்கு சவால் விட்டு, நகரில் நடுங்க வைக்கும் தொடர் கொலைகளை நடத்துகிறான், ருத்ரா. சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவராக இருக்கும் அர்ஜுன் சில சம்பவங்களால் வாழ்வா, சாவா போராட்டத்துக்கு தள்ளப்படுகிறார். இந்த இரண்டு கதைகளையும் தொடர்புபடுத்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர்தான் இமைக்கா நொடிகள்.

அஞ்சலி விக்ரமாதித்தனாக நயன்தாரா, ருத்ராவாக அனுராக் காஷ்யப், அர்ஜுனாக அதர்வா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஷி கன்னா, தேவன், ஆர்.ஜே.ரமேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். சஸ்பென்ஸ் ஆன ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். நயன் தாராவுக்கு ஜோடி இல்லை.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில், இந்த படம் தயாராகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. படம், ஆகஸ்டு வெளியீடாக திரைக்கு வரும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...