முன்னோட்டம்

பெட்டிக்கடை

பெட்டிக்கடைகளை காலி செய்த சூப்பர் மார்க்கெட். படம் "பெட்டிக்கடை" சமுத்திரக்கனி கதாநாயகனாக, கதாநாயகி, சாந்தினி, டைரக்டர் இசக்கி கார்வண்ணன், சினிமா முன்னோட்டம்.

நம் ஊர்களில் இருந்த பெட்டிக்கடைகளை எல்லாம் இப்போது வந்துள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் காலி செய்து விட்டன. பெட்டிக்கடை என்ற பாரம்பரியத்தை, உறவு சங்கிலியை, உணவு பாரம்பரியத்தை சூப்பர் மார்க்கெட் என்கிற மாயை எப்படி காலி செய்தது? என்ற கருத்தை பெட்டிக்கடை என்ற படத்தில் பதிய வைத்து இருக்கிறேன். இது எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே அழுத்தமான ஒரு கதையை பதிவு செய்து இருக்கிறேன் என்கிறார், டைரக்டர் இசக்கி கார்வண்ணன். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்தும் இருக்கிறார், இவர்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். புரட்சிகரமான சிந்தனையை கொண்ட பள்ளிக்கூட ஆசிரியராக அவர் நடித்துள்ளார். கதாநாயகி, சாந்தினி. ஆர்.சுந்தர்ராஜன், நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசையமைத்து இருக்கிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...