முன்னோட்டம்

வெடிகுண்டு பசங்க

சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் சங்கிலி திருட்டு, வழிப்பறி கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து, ‘வெடிகுண்டு பசங்க’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

வழிப்பறி கும்பல் பற்றிய படம் வெடிகுண்டு பசங்க சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் சங்கிலி திருட்டு, வழிப்பறி கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து, வெடிகுண்டு பசங்க என்ற படம் தயாராகி இருக்கிறது. விமலா பெருமாள் டைரக்ஷனில், ஜனனி கே.பாலு, தினேஷ் குமார் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட படம், இது. வழிப்பறி கும்பலின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதை. கதாநாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்துள்ளனர். இவர் களுடன் புதுமுகங்கள் பலரும் நடித்து இருக்கிறார்கள்.

டோரா, குலேபகாவலி ஆகிய படங்களுக்கு இசையமைத்த விவேக்-மெர்வின், இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் விமலா பெருமாள் கூறுகிறார்:-

தினேஷ் குமாரின் காதலி வித்யா. இவருடைய பிறந்த நாளில் பரிசு கொடுப்பதற்காக தினேஷ் குமார் போகிறார். அங்கே வித்யாவுக்கு பெரிய அசம்பாவிதம் நடக்கிறது. அதில் இருந்து அவரை தினேஷ் குமார் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே கதை.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்