அஜித்குமார் நடித்த விவேகம் படம் வியாபார ரீதியில், அவருடைய முந்தைய படங்களை தாண்டி விட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை பெரிய தொகைகளுக்கு வியாபாரமாகி இருக்கிறது. வெளிநாடுகளுக்கான உரிமை ரூ.22 கோடிக்கு பேசப்படுகிறது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த கபாலி படம், ரூ.30 கோடிக்கு மேல் வியாபாரமானது!
மணிரத்னம் புதிய படத்தில் 2 கதாநாயகர்கள்!
மணிரத்னம் டைரக்ஷனில் வெளிவந்த காற்று வெளியிடை படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், அவர் அதை மறந்து விட்டு அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டார். அவருடைய புதிய படத்தில், ராம்சரண் கதா நாயகனாக நடிக்கிறார். பகத் பாசில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.
இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மணிரத்னமும், சந்தோஷ் சிவனும் இதற்கு முன்பு ரோஜா, இருவர், தளபதி, உயிரே, ராவணன் ஆகிய 5 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள்!