பேரணாம்பட்டு,
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவரது மனைவி அனிதா (18). பிரகாசின் தந்தை சின்னசாமி (50). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அழிஞ்சிகுப்பம் நோக்கி சென்றனர். அழிஞ்சிகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, இவர்களது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த சீனு (22) என்பவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழச்ர். மேலும் இந்த விபத்தில் அனிதா, சின்னசாமி, சீனு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து நடந்த போது ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ராஜி (43) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சீனுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயம் அடைந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.